top of page

23. வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை,

வானத்தின் கீழே ஒவ்வொன்றும் மாயை 

அநித்தியமான பாவ சந்தோஷம் 

நித்திய அழிவிற்கு வழி நடத்தும் 


நெஞ்சின் வழியிலும்,

கண்ணின் காட்சியிலும்,

நடந்திடு. ஆயினும், தேவன் உன்னை 

நியாயத்தில் கொண்டுவந்து 

நிறுத்திடும் நாளில் 

தாங்குமோ உன் இதயம், தங்கிடுமோ?

- வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை


ஒருதரம் மரிப்பதும் 

நியாயத் தீர்ப்படைவதும் 

மனிதனுக்கு தேவன் நியமித்தாரே 

இன்று நீ மரித்தால் தேவனைச் சந்தித்திட 

ஆயத்தமா? நீ ஆயத்தமா?

- வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை


மெய்தனில் செய்த 

நன்மைக்கும் தீமைக்கும் 

பலனையே அளித்திட வந்திடுவார் 

கிறீஸ்துவின் நியாயாசனம் 

முன்னிருக்க இன்று

ஆயத்தமா? நீ ஆயத்தமா?

- வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை


சீயோனைக் கட்டியே என்னரும் இயேசு 

சீக்கிரமாக வெளிப்படுவார் 

ஆட்டுக்குட்டியுடன் சீயோன் மலையில் 

நின்றிட நீயும் ஆயத்தமா?

- வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை

bottom of page