top of page
235. வின் ஏகும்முன் நல்
வின் ஏகும்முன் நல் வார்த்தையை
நம் மீட்பர் மொழிந்தார்
மா நித்திய ஆறுதலை
வாக்களித்தார்
அவ்வாறு வல்ல ஆவியே
சகாயராய் வந்தார்;
மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலே
சஞ்சரிப்பார்
ஆகாத சிந்தை தோன்றினால்
மேலிடவே ஒட்டார்
விண் பயமும் மென் சொல்லினால்
அகற்றுவார்
நற்குணம், செய்கை விருப்பம்
மெய்ப் பக்தி யாவுமே
தேவாவியாலே மாத்திரம்
உண்டாகுமே
மா தூய நேச ஆவியே
தாசர்க் கிரங்குமே
சுத்தாங்கம் தந்து நெஞ்சிலே
வந்தாளுமே
bottom of page