237. கர்த்தாவே! இறங்கும்!

கர்த்தாவே! இறங்கும்!

ப்ரசன்னமாகுமே

மெய் பக்தர் நெஞ்சில் இப்பவும்

வந்தனல் மூட்டுமே


கர்த்தாவே! இறங்கும்!

நல் மீட்பர் நாமமும்

மா சுடர் போல் ப்ரகாசிக்க

பேரன்பைக் காட்டவும் 


கர்த்தாவே! இறங்கும்!

இவ்வருள் வேதத்தை

கேட்போரின் நெஞ்சில் பொழியும்

தேவாசீர்வாதத்தை

 - கர்த்தாவே! இறங்கும்!


கர்த்தாவே! இறங்கும்!

பேர் நன்மை செய்யுமே

விண்மாரி பெய்ய மேன்மையும்

உண்டாகும் உமக்கே

 - கர்த்தாவே! இறங்கும்!