top of page

238. நிர்பந்த பாவி! ஏசுவால்

நிர்பந்த பாவி! ஏசுவால் 

விமோசனம்  உண்டாம்.

மெய் வேத வாக்கை நம்பினால்

மா பாரம் நீங்குமாம்.


நம்பி வந்தால், நம்பி வந்தால்

ஏசுவண்டையில்

ரட்சிப்பாரே, ரட்சிப்பாரே

இந்த நேரத்தில்


மாசற்ற ரத்தம் சிந்தியே

பேர் வாழ் உண்டாக்கினார்

தூய்தான செந்நீர் ஸ்நானத்தால்

சுத்தாங்கம் பண்ணுவார்.


பேரின்ப ராஜ்யம் சேரவும்

மெய்வழி ஏசுவே;

சமஸ்த நன்மை பெறவும்

கைமாறில்லாமலே.


மெய் பாக்கியர் கூட்டம் சேருவாய்,

பிரயாணம் செய்யவும்

மெய்யான ஜீவன் அடைவாய்

அனந்த சந்தோஷம்.

bottom of page