top of page
241. ஏசுவையே சார்ந்திருத்தல்
ஏசுவையே சார்ந்திருத்தல்
எவ்வளவோ ஆனந்தம்
இவர் வாக்கு வசனத்தை
நம்புதலும் சந்தோஷம்.
ஏசு ஏசு நம்புவேன் நான்
சோதித்தேன் பூரணமாய்
ஏசு, ஏசு, நல்ல ஏசு!
அவர் கிருபை நம்புவேன்.
ஆம் எனக்கு பேர் இன்பந்தான்
ஏசுவை சார்ந்திருத்தல்
சாந்தி, ஜீவன், சந்தோஷமும்,
என்றும் ஈகிறார் இவர்.
இயேசுவின் ரத்தம் நம்புதல்,
எவ்வளவோ சந்தோஷம்;
அதிலே நான் மூழுகையில்
வெண்மையாவேன் முற்றிலும்.
கற்று கொண்டேன் உம்மை நம்ப,
பொன்னேசு என் நல் நண்பர்!
என்னுடனே இருக்கிறீர்,
அறிவேன் நிச்சயமாய்
bottom of page