top of page

242. இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்

இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்,

வாரும் மீட்பா வாரும்;

உம் பேரிலே என் ஆவல் அதிகம்,

வாரும் மீட்பா வாரும்.


வெகு தூரம் அலைந்து கெட்டுப்போனேன்; 

வெகு தூரம் அலைந்து திரிந்தேன்

இப்போ என்னை, உம் மந்தை சேருமே,

வாரும் மீட்பா வாரும்.


களைப்புற்றேன் தனிப் பயணத்தால்

வாரும், மீட்பா வாரும்;

உம் புன்சிரி நான் எதிர்நோக்கின்றேன்

வாரும், மீட்பா வாரும்.


நொறுங்குண்ட இதயம் படைப்பேன் 

வாரும், மீட்பா வாரும்;

என் வேண்டுதல் உம் செவி கிட்டட்டும்

வாரும், மீட்பா வாரும்;

bottom of page