243. பாவமற்ற ஏசுவை நோக்கி

பாவமற்ற ஏசுவை நோக்கி 

சாட்டிடுமே அவர் நீதியை 

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம் 

அவர் வெண் நீதியால் மூடுமே 


அவர் வெண் நீதியால் மூடுமே 

அவரை முற்றும் நம்புகிறேன் 

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம் 

அவர் வெண் நீதியால் மூடுமே 


பாவ தோஷத்தால் பட்டீர் காயம் 

மா பாவியான என்ணிம்மிதம் 

உம்மோடு என்னை மூடும் நாதா 

ஆக்கினை எனக்கில்லை இனி 


தம் நீதி வஸ்த்ரம் ஈவார் அவர் 

என் நீதி முற்றும் சூனியமே 

யாவையும் நான் களைந்து விட்டு 

அவர் வெண் வஸ்திரம் தரிப்பேன் 


ஒப்புரவானேன் அவர் இறப்பாள் 

நீதிமானானேன் அவர் ஜீவனால் 

பரிசுத்தமானேன் அவர் வார்த்தையால் 

மகிமையடைவேன் அவர் வருங்கால்