top of page
244. வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே
வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே,
தேவன் கட்டி வைத்த நகரம் உண்டே;
கஷ்டப்பட்டு மலை உச்சி சேர்கையில்,
முசிப்பாற்றும் தாய்நாடு நாம் காண்போமே.
வீடு சமீபம்! வீடு சமீபம்!
கூடம், மாடம்
ஜொலிக்கின்ற ஜோதி பார்!
மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்!
அங்கே சீக்ரம் சேர்வோம், நாமெல்லோருமே
கேட்போம் தூதர் பாட்டை
வீடு சமீபம்! வீடு சமீபம்!
தரிசனத்தின் வாக்குகளில் கேட்டுள்ளோம்
தங்க வீதி நகர் அலங்காரத்தை;
அதை இதோ மனக் கண்ணால் காண்கின்றோம்
அதன் வச்ரமதில் மாளிகையுடன்.
இயேசுவின் விசுவாசம் உடையவரும்,
கற்பனையை கைக் கொள்வோரும் உட்செல்வர்;
அங்கே நாங்கள் மகிழ்ச்சத்தம் உயர்த்தி,
துதி கீதம் என்றும் பாடிடுவோமே.
துன்பமே இல்லா அந்தப்
பாக்கிய நாட்டிலே
எங்களை நீர் சந்திப்பீரா, அன்பரே?
தேவதூதை ஏற்று உண்மையாயிரும்,
இயேசு வரும் பொது உம்மை அழைப்பார்.
bottom of page