248. நல் மேய்ப்பர் கிறிஸ்துவானவர்

நல் மேய்ப்பர் கிறிஸ்துவானவர்

தப்பிப்போன ஆடுகளை

அழைக்கும் அவர் சப்தத்தை

வனாந்தரத்தில் கேட்கிறேன்.


மந்தையில் மந்தையில்

நாம் கொண்டு சேர்த்து விடுவோம்.

திரிந்தலைவோரை

ஏசுவண்டையில் சேர்ப்போம்.


உதவி செய்ய யார் செல்வார்?

மேய்ப்பருக்கு ஒத்தாசையாய்

குளிர் இல்லாத மந்தைக்குள்

கொண்டு சேர்த்திட யார் செல்வார்?


எஜமான் கிறிஸ்த்துவானவர்

மலை காட்டினில் கதறும்

ஆடுகளை போய் தேடிட

ஏவும் சத்தத்தை கேட்கிறான்.