249. ஓய்வுநாள் பள்ளிக்கூடமே

ஓய்வுநாள் பள்ளிக்கூடமே!

மா இன்ப ஸ்தலமே!

மாட மாளிகைகளிலும் 

நீயே என் மகிழ்ச்சி 


பேரின்ப ஸ்தலமே!

ஓய்வு நாள் வீடதே!

என் ஆத்துமா உன்னை 

வாஞ்சித்து கதறுகிறது 


நான் கெட்டலைந்த காலத்தில் 

இன்ப ரட்சகரை 

கண்டு அவர் சொல் கேட்டது 

உன்னிடத்தில் தானே 


ஜீவ அப்பம் ஜீவத் தண்ணீர் 

உன்னிடம் இருக்க 

என்றும் உன்னை மறப்பேனா?

என் ஓய் வுநாள் வீடே!