top of page

250. உம்மாலே யன்றி ரட்சகா

உம்மாலே யன்றி ரட்சகா 

பேர் நன்மை காண்கிலேன்;

மெய்ச் சமாதானம் இன்பமும் 

வேறெங்கும் பெற்றிலேன்.


வேறொன்றினாலும், ரட்சகா! 

மெய்ப் பாக்கியம் அடையேன்,

உம்மாலேதான் என் ஆண்டவா! 

சந்தோஷமாகிறேன்.


பேரன்பை உணராமலே 

மெய்ப் பாக்யம் நாடினேன்;

நான் ஆவலோடே தேடியும் 

ஏமாறிப் போயினேன்.


பூலோகப் பொருள் இன்பத்தைப் 

பின்பற்றி நம்பினேன்;

சற்றேனும் அற்ப வாழ்வினால் 

நான் த்ருப்தியாகிலேன்.


இப்போதோ உன்றன் ரட்சிப்பைக் 

கண்டிளைப் பாறினேன்;

ஆனந்தம் பொங்கி, இன்பமாய் 

நான் போற்றிப் பாடுவேன்.

bottom of page