top of page

251. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!

பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே!

பேதையாம் ஏழையேன் பாதை செல்ல

நீர் அல்லால் யாருமில்லை!


இயேசு நாதா! ஏழைக்கு 

நீர் அல்லால் யாருமில்லை

இயேசு நாதா! 

நீர் அல்லால் யாருமில்லை!


சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே

நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே

சத்துரு சேனையில் வெற்றி தர

நீர் அல்லால் யாருமில்லை! 

- இயேசு நாதா! ஏழைக்கு 


ஒரே பிதாவை அறிந்திடவே

பரிசுத்தாவியைப் பெற்றிடவே

வேறேது போக்கும் வழியுமில்லை

நீர் அல்லால் யாருமில்லை!

- இயேசு நாதா! ஏழைக்கு 


நன்மை ஏதும் செய்ய அறிகிலேன்

தின்மையே யான் செய்யத் திறனுளேன்;

நற் செய்கை யாவும் உம் சித்தம் செய்ய,

நீர் அல்லால் யாருமில்லை!

- இயேசு நாதா! ஏழைக்கு 


தேவன் மகத்துவத்தில் வரவே

ஜீவ கிரீடத்தைத் தான் தரவே;

அப்போதும் நாங்கள் பாடிடுவோமே;

நீர் அல்லால் யாருமில்லை!

- இயேசு நாதா! ஏழைக்கு 

bottom of page