top of page

254. ஆண்டவர் வரும் நேரம் நாளும் அறியோம்

ஆண்டவர் வரும் நேரம் நாளும் அறியோம் 

காலம் சமீபம் அடையாளம் காண்கிறோம்

மீண்டும் வாறார் பார் உரைக்கும் வாக்குத்தத்தம்

காலம் நாம் அறியோம்.


வருவார்… காத்தே நாம் தயாராவோம்

வருவார்.. அல்லேலூயா! அல்லேலூயா!!

மேகத்தில் வருவார், பிதா மகிமையோடு

நேரம் நாம் அறியோம்.


இரட்சிப்பு தேடும் ஞானி காணும் ஒளியும்

கர்த்தர் பேசின ஆகம சத்தியமும்

தீர்க்கருரைகள் எல்லாம் மீண்டும் வாறாரே?

காலம் நாம் அறியோம்.


தீபங்கள் தூண்டி ஜெபம் விழித்தே செய்வோம்

நற்பணியாற்றி பாடி அகமகிழ்வோம்

ஆண்டவர் வாறார் ஜீவ முத்தூது சொல்வோம்

காலம் நாம் அறியோம்.

bottom of page