top of page

255. ஏசுவின் ஆச்சர்ய அன்பை

ஏசுவின் ஆச்சர்ய அன்பை

பாடித் துதித்திடுவோம் 

அவர் வீட்டில் வாசஸ்தலம் ஒன்று 

ஆயத்தம் செய்வார் 


கூடிச் சேர்ந்திடுவோம் நாம், 

என்ன பாக்கியமான நாள் அது 

ஏசுவைக் காணுவோம் நாம் 

மகிழ் கொண்டாடிடுவோம் 


நாம் ப்ரயாணம் செய்யும்போது 

மேகம் நிழல் தந்துடும் 

ப்ரயாணம் ஓயும் நாட்களில் 

பெருமூச்சு இல்லையே 


விசுவாசத்தோடே நாமும் 

ஊழியம் செய்திடுவோம் 

அவர் மகிமையின் காட்சி 

கஷ்டத்தை நீக்கி விடுமே 

bottom of page