top of page

256. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,

மா நீதியும் சம்பாதித்தார்;

என் சொந்த நீதி வெறுத்தேன்,

இயேசுவின் நாமம் நம்புவேன்;


நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,

வேறஸ்திபாரம் மணல் தான்.


கார் மேகம் அவர் முகத்தை

மறைக்கும் காலம், அவரை

எப்போதும்போல நம்புவேன்,

மாறாதவர் என்றறிவேன்; 

- நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்


நியாயத் தீர்ப்புக் காலத்தில்

எக்காள சத்தம் கேட்கையில்,

அஞ்சேன் என் மீட்பர் நீதியே

அநீதம் எல்லாம் மூடுமே;

- நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்

bottom of page