top of page

257. ஓ ஏசுவே! என் மீட்பர்

ஓ ஏசுவே! என் மீட்பர்,

இன்ப கீதம் நீரே; 

துக்கம் என்னை சூழ்கையில்,

என் ரட்சகர் நீரே. 


ஓ ஏசுவே! என் மீட்பர்,

உம்மையே போற்றுவேன்,

நீரே என் மாறா நண்பர்,

என் அன்பின் தோழர் நீர். 


கஷ்டமான காலத்தில்,

நீரே என் ஆறுதல்;

கண்ணீர் சிந்தி நிற்கையில்

நீரே என் நம்பிக்கை.


ரட்சகரை நம்புவேன்;

என் நல் வழிகாட்டி,

என் பாசம் அவரில்

தான் உலகம் யாவிலும்.


இப்பாவ உலகில் என் 

ஆத்ம சந்தோஷம்  நீர்,

பரலோக வீட்டிலும்

என் மகிழ்ச்சி நீரே.

bottom of page