259. போற்றுவேன் இயேசு அன்பை!

போற்றுவேன் இயேசு அன்பை!

என்னை முன் நேசித்தாரே!

விண்லோகம் விட்டு அவர்

கல்வாரில் மரித்தார்.


போற்றுவேன்! இயேசு அன்பை

என்றுமே என் மனதில்

எனக்காய் அவர் மாண்ட

அன்பை எண்ணி போற்றுவேன்.


நான் கண்ணீர் விடுமுன்னே

எனக்காய் கண்ணீர் விட்டார்,

நான் ஜெபம் செய்யுமுன்னே

துயரமாய் ஜெபித்தார்.


என் பாவ கறை போக்கி

தூய்மை யாக்கினீரே, உம்

தெய்வீக அன்பின் ஆழம்

யார் அளவிட கூடும்?


நான் தீமை செய்த போது

நீர் அன்பு காண்பித்தீரே,

என் உள்ளம் உமக்கு தான்

அன்பை உருவாக்குமே.