top of page

26. இயேசு என் பரிகாரி – இன்ப

இயேசு என் பரிகாரி

இன்ப இயேசு என் பரிகாரி 

என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப

இராஜா என் பரிகாரி


என்ன துன்பங்கள் வந்தாலும்

என்ன வாதைகள் நேர்ந்தாலும்

என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்

இன்ப இராஜா என் பரிகாரி


சாத்தான் என்னை எதிர்த்தாலும்

சத்துரு என்னை தொடர்ந்தாலும்

என்ன சஞ்சலங்கள் வந்தபோதும்

இன்ப இராஜா என் பரிகாரி


எனக்கென்ன குறை உலகில்

என் ராஜா துனை இருக்க 

என் ஜீவிய நாட்களெல்லாம்

இன்ப இராஜா என் பரிகாரி

bottom of page