261. முற்பிதாக்களின் நம்பிக்கை

முற்பிதாக்களின்  நம்பிக்கை

இன்றைக்கும் சாட்சியிடுதே   

அதை  கேட்கும்  என்  உள்ளத்தில்

மகிழ்ச்சி  அடைகின்றோமே.


முற்பிதாக்களின்  நம்பிக்கை

நாங்களும்  பின்பற்றுவோமே.


முற்பிதாக்கள்  காவலிலும்

சாந்தமாக  இருந்தனர்  

அந்த  சூழ்நிலை  நமக்கு

வந்தாலும்  ஏற்றுக்  கொள்ளுவோம்.


முற்பிதாக்களின்  நம்பிக்கை   

துன்பத்திலும்  நேசிக்கின்றோம்

வார்த்தையில்  நடக்கையிலும்

உலகத்துக்குக்  சொல்வோமே.