top of page

262. மெய்த்தேவனைத் துதி

மெய்த்தேவனைத் துதி; 

பேர் நன்மை செய்தார்,

குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.

உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.

நீ ஜீவனை பெற ஆருயிர் தந்தார்.


போற்றுவோம்! போற்றுவோம்!! ஜீவ நாயகரை!

நம்புவோம்! நம்புவோம்!! லோக ரட்சகரை!

ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்.

பிதாவின் சமூகம் கண்டடையலாம்.


சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.

தம் வாக்கை அன்பருக்கருள்வேன் என 

எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்

அந்நேரமே மன்னிப்பு உண்டாம் ஏசுவால்.


அதிசயமான அன்பின் பெருக்கே!

யேசுவினாலே வரும் மகிழ்ச்சியே! 

அந்நாளில் இயேசுவை நான் பார்க்கும் போது 

உண்டாகும் மகிழ்ச்சிக்கு  வரம்புண்டோ?

bottom of page