top of page
263. காலம் இது கடைக்காலம் இது
காலம் இது கடைக்காலம் இது
கர்த்தரின் வருகைக்குக் காலம் இது.
இன்றே நீ ரட்சிப்பு அடைந்திட
கிருபையின் காலம் இது
காலத்தின் அருமையை உணர்ந்து நீயும்
கிறிஸ்துவின் பாதத்தண்டை
வந்தடையத்தக்க சமயமிது
வீணாக கழித்திடாதே
- காலம் இது கடைக்காலம் இது
முதூதின் சுவிசேஷம் உலகமெங்கும்
சென்றிட காலம் இது
உன்னை அதற்காக அர்ப்பணிக்க
சற்றும் தயங்கிடாதே
- காலம் இது கடைக்காலம் இது
அறுவடை செய்திடும் காலம் இது
அதற்காக உழைத்திடும் காலம் இது
ஜெபித்து கொடுத்திட காலம் இது
எல்லாவற்றிற்கும் காலம் இது.
- காலம் இது கடைக்காலம் இது
bottom of page