top of page

265. பிளவுண்ட மலையே

பிளவுண்ட மலையே 

புகலிடம் தாருமென்,

பக்கபட்ட காயமும் 

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவ தோஷம் யாவையும் 

நீக்கும்படி அருளும்.


கண்ணீர் நித்தம் சொரிந்தும் 

தொய்யாத தவம் புரிந்தும் 

பாவம் நீங்க மாட்டதே 

நீரே மீட்பர், ஏசுவே 

உம்மை நித்தம் அடியேன் 

தஞ்சமென்று சாருவேன் 


நிழல் போன்ற வாழ்விலே 

கண்ணை மூடும் சாவிலே

உம் இரண்டாம் வருகையில் 

வாதை வரும் வேலையில் 

பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே 

bottom of page