top of page
266. வானலோக தூதர்களே
வானலோக தூதர்களே!
பூலோகம்மெங்கும் செல்லுங்கள்,
மேசியாவின் பிறப்பினை
பறை சாற்றிடுங்களேன்
ஆராதிப்போம், ஆராதிப்போம்
பாலகன் நம் ராஜனை.
மந்தையினை மேய்த்து காக்கும்
வெளியின் மேய்ப்பர்களே!
நம்மில் தங்கும் தேவ சுதன்
ஒளி வீசி மின்னுதே
கனம் செய்வோம் , கனம் செய்வோம்
பாலகன் எம் ராஜனை.
நீதிமான்கள் நீங்கள் எல்லாம்
வீண் சிந்தனை மறப்பீர்
பிறப்பின் நட்சத்திரம் கண்டு
வாஞ்சிப்போம் அக்காட்சியை
துதி செய்வோம் துதிசெய்வோம்
பாலகன் நம் ராஜனை.
பக்தரே! நீவீர் யாவரும்
பயத்தோடு தொழுவீர்
திடீரென கர்த்தர்தாமே
தோன்றி காட்சி தருவார்.
ஆராதிப்போம் ஆராதிப்போம்,
பாலகன் நம் ராஜனை.
bottom of page