top of page

267. வீர தீரமாய் நேரும் சீறுமாய்

வீர தீரமாய், நேரும் சீறுமாய் 

நீற்று ஏகமாய் போர் செய்வோம்;

பயம் இன்றியும், பின் வாங்காமலும்,

கீதம் பாடியும், முன் செல்லுவோம்.


சோம்பும் சோர்வும் நீங்கி வீரராக

யாரும் வாரும்! யுத்தம் பண்ணுவோம்.

செல்லும்! வெல்லும்! ஆரவாரமாக,

இயேசு நாதர் நம்பி போகிறோம்.


கோடி ஏற்றுவோம் காளம் ஊத்துவோம்;

வாழும் வீசுவோம், போர்கோலமாய்,

கர்த்தர் தாங்குவார், கூட போகிறார்,

வெற்றி சிறப்பார், கெம்பீரமாய்.


சேனை கர்த்தரே! இயேசு நாதரே!

தேவரீரையே கொண்டாடுவோம்

உம்மால் வல்லமை, உம்மால் மகிமை,

உம்மால் வெற்றியை கண்டடைவோம்.

bottom of page