top of page
269. கெட்டுப் போன மாந்தரை
கெட்டுப் போன மாந்தரை
இயேசு ஏற்று கொள்ளுவார்
பாவ ஆத்துமாக்களைக்
குணமாக்கி ரட்சிப்பார்.
நல்ல செய்தி! கேளுமே!
இயேசு ஏற்றுக் கொள்ளுவார்
நம்பி வாரும்! வாருமே!
தள்ளிப் போடவே மாட்டார்.
"இளைப்பாறல் தருவேன்,
நம்பி வாரும்" என்கிறார்
யாரானாலும் வாருமே!
பாவ பாரம் நீக்குவார்.
மாசில்லாத ரத்தத்தால்
சர்வ சுத்த மாக்குவார்
வல்ல தூய ஆவியால்
தீய குணம் மாற்றுவார்.
இந்த ஏற்ற நேரத்தில்
வந்து சேர கடவீர்
புண்ய நாதர் பாதத்தில்
மீட்பும் வாழ்வும் பெறுவீர்.
bottom of page