top of page
273. கர்த்தர் ஆசாரித்த ஓய்வு மறவாதே
கர்த்தர் ஆசாரித்த ஓய்வு மறவாதே
வார நாளில் சிறந்த சோபித் திநமே
லௌகீக ஜோலி நீக்கி உன்னதக் களிப்பு
விண்டல ஜோதியோடு இந்நாள் உதித்தது
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
ஓய்வு தினமே!
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
ஓய்வு தினமே!
ஓயவயாசரித்து உன்னதனைத் தொழு
சீடருக்கு ஏசு சொன்னார் "நானே ஜீவ வழி"
ரட்சகரைப் பின்சென்று
தாழ்மையாய் ஜீவித்தல்
நித்தியமாய்ப் பாய்ந்தோடும்
ஜீவ தண்ணீர் ஈவார்
பரிசுத்த இன்பம், பாலகர் ஏசுவைப்
பணிவுடன் கொண்டாடி
வாழ்த்தித் தொழுவதே
அளவில்லாத தயவே, அன்பின் இரட்சகர்
அருளிய நல்வாக்கு தேற்றுதே மனதை
bottom of page