top of page
278. தாரும் சுத்த ஆவி தாரும்
தாரும் சுத்த ஆவி தாரும்
எங்கள் ஆத்துமதிலே
எங்களுக்குயிரைத் தரும்
பரிசுத்த ஆவியே
ஞான தீபம், ஞான தீபம்
ஸ்வாமி நீரே ஏற்றுமே
எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி
தேவ பக்தி தோன்றவே
அதை நீர் குணப்படுத்தித்
தப்புச் சிந்தையானதை
மாற்றத் தாரும் மாற்றத் தாரும்
நல்ல ஆவியை
நீதிமார்கத்தில் எதிர்த்து
நிற்கும் எவ்விரோதமும்
நீங்க எங்களைக் காப்பாற்றி
நல்லோராக்கியருளும்
கால் தள்ளாடி கால் தள்ளாடிப்
போக்கில் நீரே ரட்சியும்
நெஞ்சு என்னிலே கலங்கி
நாயனே இரட்சியும்
என்றும் கெஞ்சும் போதிரங்கி
என்னைத் தெற்றித் கொண்டிரும்
துன்பம் நீங்க, துன்பம் நீங்க
நீர் சகாயராய் இரும்
bottom of page