top of page
279. பதிலுண்டா? பதிலுண்டா?
பதிலுண்டா? பதிலுண்டா?
ஜெபித்த உனக்கு பதில் உண்டா?
பதில் வரா ஜெபம் உண்டானால்
பதறாதே, பதிலுண்டுனக்கு.
அழுது ஜெபித்த உன் ஜெபத்தை
ஆண்டவர் அலட்சியம் செய்யார்;
நம்பிக்கையற்று நடுங்காதே;
நாளும் பொழுதில் பதில் தருவார்.
பாதையில் பதிந்த விசுவாசம்
பயனற் றென்றும் போகாதே;
அடிக்கும் புசல்கள் அணைத்தாலும்
அது ஒரு நாளும் அணையாதே.
கானான் பார்க்க ஆசித்து
கோனான் மோசே கெஞ்சினத்தால்;
பூமான் இயேசு மா மலையில்
பூர்த்தியாய் அளித்தார் எந்நாளும்.
பவுலாம் நல்ல அப்போஸ்தலர்
பரிந்து கெஞ்சினார் குறை நீங்க;
கிறிஸ்து பகவான் கீர்த்தி பெற
கிருபை அளித்தார் எந்நாளுமே.
bottom of page