top of page
28. கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்
கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்
கூவி அழைக்கும் வேலை இது,
குறளதனைக் கேட்பாய்;
மனந்தனத் தருவாய்;
உன்னையும் நேசிப்பாரே
தேவ மகிமையைக் கண்டிடவே
தேவ சாயலைப் போற்றிடவே
இயேசு கிறீஸ்து அழைக்கின்றார்
கிறீஸ்துவின் பாதம் நீ சரணடைவாய்
இயேசுவின் கண்கள் தேடுதே
இன்னல்கள் நீக்க நாடிடுதே
பல்லாயிரம் ஆசீர் உந்தனுக்கு
நல்லவர் இயேசு நல்கிடுவார்
மாய அன்பில் நீ மாந்திடாதே
மனித அன்பில் நீ மயங்கிடாதே
மகிபன் இயேசுவின் மாசற்ற அன்பை
மகிழ்வோடு இன்று நீ பெற்றுக் கொள்வாய்
bottom of page