280. வா! நீசப் பாவி! வா

வா! நீசப் பாவி! வா,  

என்றென்னைக் கூப்பிட்டீர்

என் தோஷம் தீர இரட்சகா! 

சுத்தாங்கம் பண்ணுவீர்

 

அருள் நாயகா! நம்பி வந்தேனே

தூய திரு இரத்தத்தால் 

சுத்தாங்கம் பண்ணுமேன்


சீர் கெட்ட பாவி நான் 

என் நீதி கந்தையே

என்றாலும் உமதருளால் 

துர்க்குணம் மாறுமே


மெய்ப்பக்தி  பூரணம் 

தேவாவியாலுண்டாம்

உள்ளான சமாதானமும் 

நற்சீறும் பெறலாம்


உண்டான நன்மையை 

நீர் விருத்தி யாக்குவீர்

இப்பாவ குணத் தன்மையை 

நிக்ரகம் பண்ணுவீர்