282. தீயோர் சொல்வதைக் கேளாமல்

தீயோர் சொல்வதைக் கேளாமல்

பாவத்துக்கு விலகி,

பரிகாசரைச் சேராமல்

நல்லோரோடு பழகி,

கர்த்தர் தந்த வேதம் நம்பி

வாஞ்சை வைத்து, அதைத்தான்

ராப் பகலும் ஓதும் ஞானி

என்றும் வாழும் பாக்கியவான்.


நதி ஓரத்தில் வாடாமல்

நடப்பட்டு வளர்ந்து,

கனி தந்து, உதிராமல்

இலை என்றும் பசந்து,

அசைவின்றிக் காற்றைத் தாங்கும் 

மரம் போலவே நிற்பான்;

அவன் செய்யவதெல்லாம் வாழ்க்கும் 

ஆசீர்வாதம் பெறுவான்.


தீயோர், பதர் போல் நில்லாமல்

தீர்ப்பு நாளில் ஒழிவார் 

நல்லோர் சபையில் சேராமல் 

வெட்கி நைந்து அழிவர் 

இங்கே பாவி செழித்தாலும் 

பாவ பலன் நாசந்தான் 

இங்கே நல்லவன் துக்கித்தாலும் 

கர்த்தர் வீட்டில் மகிழ்வான்