top of page
283. அந்தகார லோகத்தில்
அந்தகார லோகத்தில்
யுத்தஞ் செய்கிறோம்
ஏசுநாதர் பட்சத்தில்
அஞ்சாமல் நிற்கிறோம்
தானியேலைப் போல
தைர்யம் காட்டுவோம்
பயமின்றி ஊக்கமாய்
உண்மை பிடிப்போம்
பாவச் செய்கை யாவையும்
நேரே எதிர்ப்போம்
துன்பம் உண்டாயினும்
பின்வாங்கவே மாட்டோம்.
மற்றோர் நிந்தை செய்யினும்
அஞ்சுத் தளரோம்
பொல்லோர் நயம் காட்டினும்
சற்றேனும் இணங்கோம்.
வல்ல தேவ ஆவியால்
வெற்றி சிறப்போம்
லோகம் பாவம், அவரால்
மேற்கொடு ஜெயிப்போம்.
bottom of page