top of page

288. கிருபை வேண்டும் நாதா

கிருபை வேண்டும் நாதா

இயேசுவே உம் திவ்விய

கிருபை வேண்டும் நாதா

இவ்வாராதனையில்


உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே

உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது

- கிருபை வேண்டும் நாதா


ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை

இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின

- கிருபை வேண்டும் நாதா


இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி

இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின

- கிருபை வேண்டும் நாதா


பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே

பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின

- கிருபை வேண்டும் நாதா


பெந்தேகொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்

உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்த

- கிருபை வேண்டும் நாதா


தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின

நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும்

- கிருபை வேண்டும் நாதா

bottom of page