top of page

289. கைவிடார் இயேசு

கைவிடார் இயேசு கைவிடார் நம்மை

ஒருபோதும் அவர் கைவிடார்

கைவிடார் இயேசு கைவிடார்.


சாத்தானின் சேனைகள் வந்தாலும்

சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் - (2)

சேனைகளின் கர்த்தர் இயேசு

நமக்காக யத்தங்கள் செய்வார் - (2)

- கைவிடார் இயேசு கைவிடார் நம்மை


சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்

சத்துரு சேனிகள் தினம் பெருகினாலும் - (2)

இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு

நமக்காக யுத்தங்கள் செய்வார் - (2)

- கைவிடார் இயேசு கைவிடார் நம்மை


மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்

எந்தக் காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும் - (2)

ஜெயக் கர்த்தராம் நம் இயேசு

ஜெயம் காண கிருபை செய்வார் - (2)

- கைவிடார் இயேசு கைவிடார் நம்மை

bottom of page