top of page

29. தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சித்தம் நிறைவேற 

என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம் 

பலமாக தொனிக்குதே


முட்களுக்குள் மலர்கின்றதோர்

மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

என்னையுமே தம் சாயலாய்

என்றென்றும் உருவாக்குவார்

- தேவ சித்தம் நிறைவேற 


பொன்னைப் போல புடமிட்டாலும்

பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே

திராணிக்கு மேல் சோதித்திடார்

தாங்கிட பெலன் அளிப்பார்

- தேவ சித்தம் நிறைவேற


அத்திமரம் துளிர்விடாமல் 

ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும் 

கர்த்தருக்குள் சந்தோஷமாய் 

நித்தமும் மகிழிந்திருப்பேன் 

- தேவ சித்தம் நிறைவேற


நீதிமானை அனுதினமும் 

சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும் 

கர்த்தர் அன்பை விட்டு நீங்காச் 

சுத்தனாய் நிலைத்திருப்பேன் 

- தேவ சித்தம் நிறைவேற

bottom of page