top of page

293. ஜெயங் கொடுக்கும்

ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு

கோடி கோடி ஸ்தோத்திரம்

வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு

வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் - (2)


அல்லேலுயா அல்லேலுயா பாடுவேன்

ஆனந்த தொனியால் உயர்த்துவேன் - (2)


நீதியின் கரத்தினால்

தாங்கியே நடத்துவார் - (2)

கர்த்தரே என் பெலன்

எதற்குமே அஞ்சிடேன் - (2)

- ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு


அற்புதம் செய்பவர்

அகிலம் படைத்தவர் - (2)

யுத்தத்தில் வல்லவர்

மீட்பர் ஜெயிக்கிறார் - (2)

- ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு


நம்பிக்கை தேவனே

நன்மைகள் அளிப்பவர் - (2)

வார்த்தையை அனுப்பியே

மகிமைப் படுத்துவார் - (2)

- ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு


உண்மை தேவனே

உருக்கம் நிறைந்தவர் - (2)

என்னைக் காப்பவர்

உறங்குவதில்லையே  - (2)

- ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு

bottom of page