top of page

295. உம்மை நம்பி உந்தன் பாதம்

உம்மை நம்பி உந்தன் பாதம்

உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்

ஒருபோதும் கைவிட மாட்டீர்.


கண்ணீரைத் துடைத்து

கரங்களைப் பிடித்து

காலமெல்லாம் காத்துக் கொண்டீர்

என்னை காலமெல்லாம் காத்துக் கொண்டீர்

- உம்மை நம்பி உந்தன் பாதம்


மகனாக மகளாக 

அப்பா என்றழைக்கும்

உரிமையை எனக்குத் தந்தீர்

ஐயா, உரிமையை எனக்குத் தந்தீர்

- உம்மை நம்பி உந்தன் பாதம்


அச்சாரமாய் முத்திரையாய்

அபிஷேக வல்லமையை

அடிமைக்குத் தந்தீரே

ஐயா, அடிமைக்குத் தந்தீரே

- உம்மை நம்பி உந்தன் பாதம்


குருடர்கள் பார்த்தார்கள்

செவிடர்கள் கேட்டார்கள்

முடவர்கள் நடந்தார்கள்

ஐயா, முடவர்கள் நடந்தார்கள்

- உம்மை நம்பி உந்தன் பாதம்

bottom of page