top of page
299. அன்புள்ள இயேசையா
அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)
காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
- அன்புள்ள இயேசையா
தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
- அன்புள்ள இயேசையா
bottom of page