top of page

30. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண

பாவ சஞ்சலத்தை நீக்க, ப்ராண ஸ்நேகித னுண்டே,

பாவச் சுமை தீர்த்துப் போட, ஏசுவின் நற் பாதமே. 

சேருவோமே, திகைப்போமே, சால துக்க துன்பத்தால், 

புத்தியீனம் மாறிப் போகும், ஜெப தபம் செய்வதால். 


கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்

மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்

நீக்குவாரே நெஞ்சின் நோவை; பெலவீனம் தாங்குவார்

நீக்குவாரே உன் மனச்சோர்வை தீய குணம் மாற்றுவார்


பெலவீனமான போதும் கிருபாசனம் உண்டே!

இன் ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே

ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்;

அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

bottom of page