302. மேல் நோக்கி முன்னேறுகிறேன்

மேல் நோக்கி முன்னேறுகிறேன் 

ஒவ்வொரு நாளிலுமே நான் 

இன்னும் மேல் நோக்கி சென்றிட 

ஜெபித்துக் கொண்டேயிருப்பேன்


துருக்கிடும் நான் நிற்பனே 

உம்மீது நம்பிக்கையிலே

உயர்ந்த ஸ்தலத்தில் என்றன்

கால்கள் நிலைநிறுத்துமே


சந்தேகப் புயல் வேளையில் 

எனக்குப் பயமேயில்லை 

அநேகர் அதில் மூழ்கினும் 

உயர்த்த ஸ்தலம் என் நோக்கம் 


சாத்தான் என்னைச் சோதித்தாலும் 

உலகத்தை வெற்றி கொள்வேன் 

உயர் ஸ்தலத்தின் பாடல்கள் 

என்னை நிலை நிறுத்ததே


மகிமை பரகசக் காட்சி 

காண்பதே எனது வாஞ்சை 

நான் மோட்சம் அடையும்வரை 

கர்த்தாவே என்னை நடத்தும்