top of page

306. உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

நீ அற்புதம் கண்டிடுவாய் (2)


இன்று வாக்களித்தார் தேவன்

இன்று நிறைவேற்ற வந்து விட்டார் (2)

- உன்னை அதிசயம் காணச் செய்வேன்


வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே

செங்கடலும் திறந்தே வழிவிடுமே

தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே

இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே

- உன்னை அதிசயம் காணச் செய்வேன்


குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே

இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே

வாதையெல்லாம் மறைந்தே போகுமே

பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே

- உன்னை அதிசயம் காணச் செய்வேன்


சத்துருவை மேற்குள்ளும் அதிசயமே 

நிச்சயமாய் இன்றே நடத்திடுமே 

கர்த்தர் நின்றே யுத்தம் செய்வாரே 

உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே

- உன்னை அதிசயம் காணச் செய்வேன்


வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே

காரிருளில் பேரொளி வீசிடுமே

வனாந்திரமே வழியாய் வந்தாலும்

வல்லவரின் கரமே நடத்திடுமே

- உன்னை அதிசயம் காணச் செய்வேன்

bottom of page