top of page

309. நம் இயேசு நல்லவர்

நம் இயேசு நல்லவர் 

ஒருபோதும் கைவிடார்

ஒரு நாளும் விலகிடார் - 2


ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்

சாத்தானை மிதிப்போம்

தேசத்தை சுதந்தரிப்போம் 


அதிசயமானவர் 

ஆறுதல் தருகிறார்

சர்வ வல்லவர்

சமாதானம் தருகிறார் (2) உனக்கு

- ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்


கண்ணீரைக் காண்கிறார் 

கதறலைக் கேட்கிறார்

வேதனை அறிகிறார்

விடுதலை தருகிறார் (2) இன்று 

- ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்


எதிர்காலம் நமக்குண்டு 

எதற்கும் பயமில்லை

அதிகாரம் கையிலே

ஆளுவோம் தேசத்தை (2)  நாம்

- ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்


நொறுங்குண்ட நெஞ்சமே 

நோக்கிடு இயேசுவை

கூப்பிடு உண்மையாய்

குறையெல்லாம் நீக்குவார் (2) உன்

- ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்

bottom of page