top of page

311. என் ஜீவனின் மா ராஜனே

என் ஜீவனின் மா ராஜனே 

நான் உமதடிமை

எனக்காக நீர் அணிந்த 

முள்முடி மறவேன் 


கெத்சமனேயை மறவேன் 

உம துயரத்தை மறவேன் 

உம் அன்பை என்றும் மறவேன் 

கல்வாரிக்கு நடத்தும் 


எனக்காக நீர் சுமந்த 

சிலுவை மறவேன் 

அம் மரத்தில் நீர் அடைந்த 

பாடுகள் மறவேன் 


நீர் நித்திரை செய்தபோது 

தூதர் வந்த காவல் 

செய்த வெறும் கல்லறையை 

எனக்குக் காண்பியும் 


நாள்தோறும் என் சிலுவையை 

உமக்காய்ச் சுமப்பேன் 

பாதை துயரமாகிலும் 

நான் செல்வேன் உம்முடன்    

bottom of page