top of page

312. மேகமீதியில் தூதரோடித்தோ

மேகமீதியில் தூதரோடித்தோ, இதோ 

மேசியா கிறிஸ்தேசைய 

எனதாசை நேசையா 

வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய் 


மேகத்தோடு போனவர்

இவர், இவர்!

திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட 

சீக்கிரம்! சீக்கிரம்!! ஜெகத்தை நோக்கியே

- மேகமீதியில் தூதரோடித்தோ


ஒலிவ மலை விட்டேகினார்

அப்போ அப்போ 

உருவதோடவர் திரும்புவதை 

நாம் உற்று நோக்குவோம் 

கூடி, பாடி வந்து போற்றுவோம்

- மேகமீதியில் தூதரோடித்தோ


ஆரவாரம் கேட்குதே அதோ! அதோ!! 

ஆட்டு குட்டியின் பாட்டைக்

கேட்க அதிர்ந்து நிற்குதே

அல்லேலூயா அருமை ரட்சகா

- மேகமீதியில் தூதரோடித்தோ


மனுவேல் ராஜன் வருகிறார் 

இதோ! இதோ!! 

மலை நடுங்கிட, புவி அதிர்ந்திட 

கடல் கலங்கிட 

வானோர் புவோர் வணங்கி நிற்கவே

- மேகமீதியில் தூதரோடித்தோ

bottom of page