top of page

32. குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள்

நடுவானில் தோன்றிடுமே

இதுவரை இருந்த துன்பமில்லை

இனி என்றுமே ஆனந்தம்


தள கர்த்தனாம் இயேசு நின்று

யுத்தம் செய்திடுவார் நன்று

அவர் ஆவியினால் புது பெலனடைந்து

ஜெயகீதங்கள் பாடிடுவோம்

- குதுகலம் நிறைந்த நன்னாள்


புவி மீதினில் சரீர மீட்பு

என்று காண்போம் என ஏங்கும்

மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்

மணவாட்டியைச் சேர்த்திடவே

- குதுகலம் நிறைந்த நன்னாள்


ஜெப விழிப்புடன் வாஞ்சையாக

அவர் வருகையை எதிர்நோக்கி

நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்

நாம் ஆயத்தமாகிடுவோம்

- குதுகலம் நிறைந்த நன்னாள்


தேவ தூதர்கள் கானமுடன்

ஆரவார தொனி கேட்கும்

அவர் கிருபையினால் மறுரூபமாக

நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்

- குதுகலம் நிறைந்த நன்னாள்

bottom of page