top of page

35. இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட 

இயேசு வாக்களித்தாரே  

முன்மாரி மேல் பின்மாரி மழையே 

உன்னதத்தினின்று வந்திறங்குதே 

- இரட்டிப்பான நன்மைகள் தந்திட 


பெலத்தின் மேலே மா பெலனே 

புது பெலன் நாம் பெற்றிட 

சால்வதனை எலிசா அடைந்தாற்போல் 

சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்

- இரட்டிப்பான நன்மைகள் தந்திட 


நம்பிக்கையின் மேல் நம்பிக்கை 

நல் விசுவாசம் பெற்றிட 

ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த 

அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம் 

- இரட்டிப்பான நன்மைகள் தந்திட 


பரிசுத்தம் மேல் பரிசுத்தம் 

பங்கமில்லாமல் பெற்றிட 

நீதியின் சூரியன் ஏசுவுடனே 

நீதி அணிந்து என்றும் ஆளுவோம் 

- இரட்டிப்பான நன்மைகள் தந்திட 


மகிமையின் மேல் மாமகிமை 

மறுரூபம் நாம் பெற்றிட 

கண்ணிமை நேரத்திலே பறந்தேகி 

கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் 

- இரட்டிப்பான நன்மைகள் தந்திட 

bottom of page