top of page

37. அன்பர் பாதம் போதுமே

அன்பர் பாதம் போதுமே 

அண்ணல் ஏசு நாமம் போதுமே 

இன்னல் நீக்கி என்னைத் தேற்றும்,

அன்பர் பாதம் போதுமே.


ஆ.. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா

ஆ.. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா 


துன்பம் துக்கம் நேரிடினும்,

என் தந்தை தாயும் தள்ளிடினும், 

என்னைப் பாதுகாத்து மீட்கும் 

அன்பர் பாதம் போதுமே 


நண்பர் பலரும் தள்ளிடினும்,

உயிர் உறவினரும் வெறுத்தாலும், 

ஏசுராஜா என்னைக் காத்து,

மேய்ச்சமாதானம் தந்திடார் 

bottom of page