top of page

4. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் 

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே! 

குறையில்லையே, குறையில்லையே 

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே! 


புல்லுள்ள இடங்களிலே 

என்னை மேய்க்கின்றார்! 

தண்ணீரண்டை கூட்டிச் சென்று 

தாகம் தீர்க்கின்றார்! 

- சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் 


எதிரிகள் முன் விருந்தொன்றை 

ஆயத்தப்படுத்துகிறார்! 

என் தலையை எண்ணெயினால் 

அபிஷேகம் செய்கின்றார்! 

- சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் 


ஆத்துமாவை தேற்றுகின்றார் 

ஆவி ஊற்றுகின்றார்! 

ஜீவனுள்ள நாட்களெல்லாம் 

கிருபை என்னைத் தொடரும்! 

- சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் 


என் தேவன் தம்முடைய 

மகிமை செல்வத்தினால் 

குறைகளையே கிறிஸ்துவுக்குள் 

நிறைவாக்கி நடத்திடுவார்!

- சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் 

bottom of page