top of page
41. விசுவாச நாட்டை நோக்கி
விசுவாச நாட்டை நோக்கி
வேகம் ஓடுவோம்
வேகம் ஓடுவோம் நாம்
வேகம் ஓடுவோம்
நமக்கு இங்கு நிலையான
நகரம் இல்லையே
நமது வீடு நித்ய வீடு பாக்கிய வீடது
சுந்தர வீடு நல் துதிகளின் வீடு
வான லோகத்திலே
- விசுவாச நாட்டை நோக்கி
வியாதி உண்டு கஷ்டம் உண்டு
இந்த லோகத்தில்
மரணம் உண்டு துக்கம் உண்டு
இந்த பாரினில்
கண்ணீரில்லா நாடு, கவலை இல்லா வீடு
வான லோகத்திலே
- விசுவாச நாட்டை நோக்கி
எமது அன்பர் வந்திடுவார் தூதரோடு
சிறப்புடனே சூரியனாக பிரகாசிப்பார்
பாக்யமான நாடு - பாவமில்லா நாடு
வான லோகத்திலே
- விசுவாச நாட்டை நோக்கி
bottom of page