top of page
42. வரும் பாவியை ஒரு போதிலும்
வரும் பாவியை ஒரு போதிலும்
வெறுக்கார் கிறிஸ் தேசு
திருவானவர் அருளால் உன்றன்
கறை நீங்கிட மீட்பார்
பாவி உன்றன் மீட்பரண்டைத்
தாவி ஓடி வருவாய்;
கூவி அவர் பாதம் வந்து
மேவி மீட்பைப் பெறுவாய்
நாடி வரும் பாவிகளை
'ஓடு' என்று முடுக்கார்;
பாடி மகிழ் கொள்ள உள்ளம்
மாறுதலை அளிப்பார்
உன்றன் நீதி யாவும் மெய்யாய்க்
கந்தை என்று உணர்வாய்
என்றன் இயேசு மீட்பர் பாதம்
வந்து மனம் மாறு
bottom of page